மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு இன்றளவில் உலகம் முழுவதிலும்., சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அடிமையாகி., போதை பழக்கத்தில் இருந்து விடுபட இயலாமலும் தவித்து வருகின்றனர். இந்த தருணத்தில்., கிராமத்தில் உள்ள இளைஞர்களில் இருந்து யாருமே மது மற்றும் புகை போன்ற பொருளுக்கு அடிமையாகாமல் இருப்பது பெரும் ஆச்சர்யத்தையும்., மன மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் அருகேயுள்ள அந்த அற்புதமான கிராமத்தின் பெயர் தேனூர். இந்த கிராமம் மதுரை நகரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள நிலையில்., இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த அற்புதமான கிராமத்தில் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக., கிராமத்து மக்களால் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இவர்களின் நடைமுறையின் படி., புகை பழக்கம் மற்றும் மது பழக்கம் போன்ற மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்றும்., அனுமதியை மீறி யாரேனும் போதை பொருட்களை விற்பனை செய்வது தெரியவரும் பட்சத்தில், கிராமத்தின் நிர்வாகம் சார்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது அரசாங்க அனுமதி பெற்ற மதுக்கடைகடைகளுக்கும் இங்கு அனுமதி இல்லை. இதன் காரணமாக இந்த கிராமத்தில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் எந்த விதமான கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகவில்லை. மேலும்., மூன்று தலைமுறைகள் கடந்தும் கூட., இந்த கட்டுப்பாடானது இன்னும் இக்கிராமத்தில் நிலவி வருகிறது.